• vilasalnews@gmail.com

உரிய அனுமதியின்றி லாரிகளில் சரள் மண் எடுத்து சென்ற இருவர் கைது - லாரிகள் பறிமுதல்!

  • Share on

திருச்செந்தூரில் உரிய அனுமதியின்றி லாரிகளில் சரள் மண் எடுத்து சென்ற இருவர் கைது போலீசார்  செய்து அவர்களிடமிருந்து சரள் மண் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் போலீசார் இன்று (29.12.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் உள்ள காந்திபுரம் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் எந்தவித உரிய அரசு அனுமதியின்றி சரள் மண் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து அந்த லாரிகளின் ஓட்டுநரான சின்னதுரை (39), த/பெ. காமாட்சி, முனைஞ்சிப்பட்டி, நாங்குநேரி, திருநெல்வேலி மற்றும் சேகர் (22), த/பெ. வெள்ளத்துரை, உச்சினி மாகாளியம்மன் கோவில் தெரு, நாங்குநேரி, திருநெல்வேலி ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 6 யூனிட் சரள் மணலும், TN 92 D 8232 (ASHOK LEYLAND TIPPER), TN 92 C 9499 ( BHARAT BENZ LORRY) ஆகிய எண்கள் கொண்ட இரண்டு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து - 31 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் ஆய்வு கூட்டம்!

  • Share on