• vilasalnews@gmail.com

கயத்தாறு அருகே முன்விரோத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

  • Share on

கயத்தாறு முன்விரோதம் காரணமாக கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு, சவலாப்பேரி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (65) த/பெ. சண்முகம் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகையா (29) த/பெ. முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  இந்நிலையில் கடந்த 24.12.2021 அன்று முத்துப்பாண்டி அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சண்முகையா, முத்துபாண்டியிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் வழக்கு பதிவு செய்து சண்முகையாவை கைது செய்தார்.

  • Share on

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து - 31 பேர் கைது!

  • Share on