தூத்துக்குடியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில் மில்லர்புரத்தில் உள்ள ஆயுதபடை வளாகத்தில் இருந்து துவங்கப்பட்டு பாளை சாலையில் சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் 150-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது, செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெலிக்ஸ்சன் மாசிலாமணி, தனபால், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனாஸ் கம்பெனி(வாகனம்), யங் இந்தியன்ஸ் தொண்டு நிறுவனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.