தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளர்களை தனியார் மற்றும் துறைமுக நிர்வாகம் வேலைக்கு பயன்படுத்துவதால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று 28. 12 .2021 இது தொடர்பாக தூத்துக்குடி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தில் வைத்து தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவனோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், தெற்கு மாவட்ட தலைவர் ரோபி பிரபாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தனியார் ஒப்பந்ததாரர் சார்பாக ஒருசிலர் மட்டுமே கலந்து கொண்டதால் இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியனர் எதிர்ப்பு தெரித்து, அனைத்து தனியார் ஒப்பந்ததாரர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் முதல் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
மேலும், வரும் ஜனவரி 5 ம் தேதிக்குள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு எட்டப்படவில்லை யென்றால் தூத்துக்குடி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முன்போ, துறைமுகம் பகுதியிலோ அனைத்து அமைப்புகளையும், தொழிலாளர்களையும், பொது மக்களையும் ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தெரிவித்துள்ளனர்.