சிலம்பம் போட்டியில் சாதித்த தூத்துக்குடி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி ஸ்டேட்வங்கி காலனியை சேர்ந்தவர் குருராஜா. பழ வியாபாரி. இவரது மனைவி யுவராணி. இவர்களின் மகன் சந்தோஷ்குருநாதன் (வயது 7). இவர் ஓராண்டுக்கும் மேலாக சிலம்பம் பயிற்சி பெற்றார். தொடர்ந்து சிலம்பத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினார். இதில் மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளார்.
இந்த நிலையில் கொடைக்கானலில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்ற சந்தோஷ் குருநாதன் சிறப்பாக விளையாடி தங்க பதக்கத்தை வென்றார். அவரை தூத்துக்குடி மாவட்ட மாவட்ட செந்தில்ராஜ் பாராட்டி பரிசு வழங்கினார்.