• vilasalnews@gmail.com

கீழமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வழங்க செயலர் மறுப்பதாக விவசாயிகள் புகார் : மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க புகார் மனு!

  • Share on

 கீழமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க மறுப்பதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் சங்கம் மூலம் கீழமங்கலம் பகுதி விவசாயிகள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவில்பட்டி கூட்டுறவு சரகம் கீழமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்போது பணிபுரிந்து வரும் செயலர் பயிர் கடன் வழங்குவதற்காக மேற்படி கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் 10 லட்சம் மட்டுமே வரப்பட்டு உள்ளதாகவும், அதனால் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வழங்க இயலாது என விவசாயிகளிடம் சொல்லி பயிர்க்கடன் சம்பந்தமான ஆவணங்களை பெறாமல் திருப்பி அனுப்பி விடுகிறார். ஆனால் தனக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் வேண்டிய நபர்களுக்கு மட்டுமே பயிர் கடன் வழங்க ஆவணங்களை பெற்று வருகிறார். இதனால் தமிழக அரசால் விவசாயிகள் பயிர் கடன் பெற காலநீட்டிப்பு செய்தும் செயலரின் இந்த செயலால் விவசாயிகள் கடன் பெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேலும், இங்கு பணிபுரியக்கூடிய செயலர் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இங்கேயே பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டடு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர். மேலும் டிராக்டரை விற்றுவிட்டு அதேபோன்று கடன் சங்கத்திற்கு விவசாய டிராக்டர் வாங்கி அதையும் இவரது சொந்த உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தி எவ்வித லாபமும் காட்டாமல் உதிரி பாகங்களை எல்லாம் கழட்டி விற்றுவிட்டு எலும்பு கூடாக காட்சி அளிக்கக் கூடிய அவல நிலையில் டிராக்டரை சொசைட்டியில் ஒரு ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, கடன் சங்கத்தில் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகிறார். இது சம்பந்தமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என தெரியவில்லை.

எனவே மேற்படி கூட்டுறவு கடன் சங்கத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கிட தாங்கள் நடவடிக்கை எடுக்கவும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டு தொடர்ந்து கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பயன் பெற முடியாத அளவிற்கு சர்வாதிகார போக்கில் இங்கு பணிபுரிந்து வரும் இவரை எவ்வித சமரசமும் இல்லாமல் காலதாமதமின்றி இடமாற்றம் செய்து கடன் சங்கத்தை காப்பாற்றவும் தங்கள் நடவடிக்கை எடுக்க கீழமங்கலம் பகுதி விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  • Share on

விளாத்திகுளம் அருகே ஆன்மீக சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து : 5 பேர் படுகாயம்!

மாப்பிள்ளையூரணி பஞ்., அழகாபுரியில் இலவச பட்டா வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்!

  • Share on