• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் 3ம் ஆண்டு துவக்க விழா!

  • Share on

தூத்துக்குடியில் அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் 3ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

தூத்துக்குடி அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்க தூத்துக்குடி மாவட்ட 3ம்ஆண்டு துவக்க விழா, மகளிர் சங்கமம், தொழில் மேலாண்மை என முப்பெரும் விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் முத்துவிஜயன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் அசோக்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயலாளர் பாலாஜி வரவேற்புரையாற்றினார்.

விழாவில் பெருங்குளம் செங்கோள் ஆதீனம் ஸ்ரீஸ்ரீசிவப்பிரகாச தேசீக சத்யஞான பரம்மச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பேசுகையில்:

இந்தியா சுதந்திர போராட்டத்தின் போது வஉசியின் போராட்டமும் அவர் முன் எடுத்துச்சென்ற பணிகளும் மிகப்பெரிய சாதனையை படைத்தது. அவரின் சாதனை அனைத்து மதத்தினர் மட்டுமின்றி எல்லோருக்கும் அப்பாற்பட்டது. பெற்றோர்கள் குழந்தைகளை நல்ல ஓழுக்கத்துடன் வளர்த்து கல்வி தொழில் என அனைத்திலும் முன்னேற வேண்டும். ஆன்மீகம் கலந்த அமைப்பு நல்ல வளர்ச்சி அடையும் என்றார்.

விழாவில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவரும் அதிமுக ஒன்றிய செயலாளருமான லெட்சுமண பெருமாள், திமுக பிரமுகர் கீதாசெல்வமாரியப்பன், டாக்டர் அருணாச்சல முதலியார், இம்பா நிறுவனத்தலைவர் ரகுராம், பொருளாளர் சந்திரசேகர், ராமச்சந்திரன், கிருஷ்ணபிள்ளை, மாநில துணைத்தலைவர் பொன்ராஜ், மாநில அமைப்பு செயலாளர் ரவிபிள்ளை, தூத்துக்குடி சைவ வேளாளர் சங்க தலைவர் தெய்வநாயகம், மாநில மாதர் சங்க ஒருங்கிணைப்பாளர் நீலா, மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும், விழாவில் வேலாயுதம், செந்தில் ஆறுமுகம், கண்ணன், தமிழ்நாடு சேனைத்தலைவர் ஹரி, நெல்லை மாவட்ட இம்பா தலைவர் சிவசுப்பிரமணியன், விருதுநகர் மாவட்ட செயலாளர் ராமர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் அருள், ராமநாதபுர மாவட்ட தலைவர் நல்லமுத்து, தேனி மாவட்ட ஓருங்கிணைப்பாளர் பாரதியாளர் பிள்ளை, இம்பா துணைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட இம்பா மகிளர் தலைவர் கோமதி, செயலாளர் சுந்தரி, பொருளாளர் நாகலட்சுமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். குற்றாலிங்கம் நன்றியுரையாற்றினார்.

  • Share on

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா - இலவச கண் பரிசோதனை முகாம்!

விளாத்திகுளம் அருகே ஆன்மீக சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து : 5 பேர் படுகாயம்!

  • Share on