முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி 97 வது பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு சார்பில் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் ஆத்தூர் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண்பரிசோதனை மூலம் பயன் அடைந்தார்கள்.
இந்த முகாமில் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக விவேகம் ரமேஷ் கலந்து கொண்டார்கள். மருத்துவப்பிரிவு மாவட்ட தலைவர் மேரி ரோசாரி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் காளி ராஜா, துணைத் தலைவர் ஜெயக்குமார், விவசாய அணி பிரிவு மாவட்ட செயலாளர் தில்லை யோகானந்த், இளைஞர் அணி மாவட்ட தலைவர் விக்னேஷ், வடக்கு மண்டல தகவல் தொழில்நுட்ப தலைவர் கலைச்செல்வன், மண்டல நிர்வாகிகள் பிரகாஷ், நாகராஜன், லிங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.