தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடிபோதையில் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை போலிசார் கைது செய்தனர்.
வினோத் (எ) டேஞ்சர் வினோத் (40) த/பெ. ராஜபாண்டி, போல்டன்புரம், தூத்துக்குடி என்பவர் அடிக்கடி மது அருந்திவிட்டு அவரது வீட்டின் அருகே வசிப்பவர்களை தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளார். இதனை அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் (26) த/பெ. சூசைமுத்து என்பவர் நேற்று (25.12.2021) தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத் (எ) டேஞ்சர் வினோத் குடிபோதையில் முகேஷை அரிவாளால் தாக்கியும் இதனை தடுக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த மரிய மைக்கேல்ராஜ் (41) த/பெ. ஜேசுமணி என்பவரையும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மரிய மைக்கேல்ராஜின் மனைவி ஜலஜா (38) என்பவர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து வினோத் (எ) டேஞ்சர் வினோத்தை கைது செய்தார்.
மேற்படி கைது செய்யப்பட்ட வினோத் (எ) டேஞ்சர் வினோத் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.