• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடி கைது!

  • Share on

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி யை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் உத்தரவுபடி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவராஜா மற்றும் போலீசார் நேற்று (25.12.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் அருகே  சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ராஜா (எ) ராஜாமணி (28), த/பெ. ஜெயக்குமார், வெற்றி நகர், தாளமுத்துநகர், தூத்துக்குடி என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர்.

இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட  ராஜா (எ) ராஜாமணி என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை, கொலை மிரட்டல் உட்பட 10 வழக்குகளும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும்  என மொத்தம் 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

பஞ்சாயத்து தலைவரின் கணவரை தாக்கிய அதிமுக பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடியில் குடிபோதையில் தகராறு செய்து அரிவாளால் தாக்கியவர் கைது!

  • Share on