ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரம் பஞ்சாயத்து தலைவரின் கணவரை தாக்கிய அதிமுக பிரமுகரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கச்சேரி தளவாய்புரம் பஞ்சாயத்து தலைவர் சேர்மன் பொன்செல்வி. இவரது கணவர் ரவிக்குமார். கச்சேரி தளவாய்புரம் கீழ காலனி பகுதியை சேர்ந்தவர் வன்னியபெருமாள்( 60 ) இவர் அதிமுக கிளைச் செயலராக உள்ளார். இந்நிலையில் எம்ஜிஆரின் நினைவுநாள் விழா நடத்த வன்னியபெருமாள் ரவிக்குமாரிடம் 500 ரூபாய் கேட்டாராம் ரவிக்குமார் பிறகு தருவதாக கூறி சென்றுவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, நேற்று கச்சேரி தளவாய்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் வந்த வன்னியபெருமாள் அங்கு நின்ற ரவிக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு கைகலப்பாகி இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
தொடர்ந்து ரவிக்குமார் ஓட்டப்பிடாரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வன்னியபெருமாளை தேடி வருகின்றனர்.