எம்ஜிஆரின் 34ஆவது நினைவு நாளை முன்னிட்டு எம்ஜிஆர் அண்ணா திமுக சார்பில் தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அதிமுக நிறுவனத் தலைவரும், தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் திருஉருவச்சிலைக்கு எம்ஜிஆர் அண்ணா திமுக சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எஸ்.ரவிவர்மா, பொதுச் செயலாளர் எஸ்.முத்துக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.