• vilasalnews@gmail.com

எம்ஜிஆர் நினைவு நாள்: கடம்பூர் செ.ராஜூ, காந்தி காமாட்சி மரியாதை!

  • Share on

எம்ஜிஆரின் 34ஆவது நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவரும், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளருமான காந்தி காமாட்சி ஆகியோர் பசுவந்தனையில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

அதிமுக நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் குறுக்குச்சாலை, பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளில் எம்ஜிஆரின் 34 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில், முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ மற்றும் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய தலைவரும், ஓட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றியச்செயலாளருமான காந்தி காமாட்சி ஆகியோர் பசுவந்தனையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பெரியாரின் 48வது நினைவு தினம்: அமைச்சர் மரியாதை

எம்ஜிஆர் நினைவு நாள்: எம்ஜிஆர் அண்ணா திமுக மரியாதை!

  • Share on