முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவையினர் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
பறையர் பெருங்குடியில் பிறந்த இந்திய அரசியலில் நேர்மை கரைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் தியாகசீலர் ஐயா கக்கன் அவர்களின் 40 வது நினைவு தினம் தூத்துக்குடியில் உள்ள போல்டன்புரம் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை தலைமை அலுவலகத்தில் வைத்து அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் நீலமலர், மகா, சரவணன் ஆகியோர் தலைமையில் நிறுவன தலைவர் இளவரசபாண்டியன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகர வழக்கறிஞர் அணி செயலாளர் செ. பிரசாத், தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் கு.வினோத், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரா.ராபின்பிரபாகரன், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வே.சதீஷ், மற்றும் மணிராஜ், சி.மரி,செ.பிராங்கிளின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.