• vilasalnews@gmail.com

கக்கன் ஜி நினைவு நாள்: தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

  • Share on

முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி 40வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் குழு (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரஸ் அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி கக்கன் ஜி 

இவரின் 40 வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், பிரபாகரன் , SC/ST பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், அமைப்பு சாரா மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். பி.ராஜன், அமைப்பு சாரா மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாவட்ட துணை தலைவர்கள் அருணாச்சலம், ஜான் சாமுவேல் தர்மராஜ், மாவட்ட செயலாளர் கோபால், மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, வார்டு தலைவர்கள் தனுஷ், சண்முகசுந்தரம், ஜோசப், பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் திருடப்பட்ட கார் சென்னையில் மீட்பு!

கக்கன்ஜி நினைவு நாள்: தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவையினர் மரியாதை

  • Share on