தூத்துக்குடி என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ்(29) இவர் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 18ம் தேதி இவர் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார், மறுநாள் இந்த கார் திருடப்பட்டது.
இது குறித்து தென்பாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரேனியால் ஜேபாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த கமாலுதீன் மகன் ஹனிபா(38), அசோக் நகரைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் மகன் விக்னேஷ்( 35 ) ஆகியோர் காரை திருடியது தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே ஒரு கார் திருட்டு வழக்கில் சென்னை பல்லாவரத்தில் போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு காவலர்கள் நேற்று ஹனிபா, விக்னேஷ் ஆகியோரை கைது செய்து அவரிடமிருந்து காரை மீட்டனர்.