• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் ஆலை ஏன் மீண்டும் திறக்க வேண்டும்?

  • Share on

ஸ்டெர்லைட் ஆலை ஏன் மீண்டும் திறக்க வேண்டும்? என்பது குறித்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் இன்று ( 20-12-2021)  பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில் :

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் 1996-97 ல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே சமூகப் பொறுப்பை அதன் வணிக கட்டமைப்பில் கொண்டுள்ளது. 2018ல் நிறுவனம் மூடப்பட்ட பிறகும் 2021ல் அதன் சிஎஸ்ஆர் நடவடிக்கைகளுக்காக 60 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாடு ஆக்சிஜன் பற்றாக்குறையால் தத்தளிக்கும் நேரத்தில், ஸ்டெர்லைட் தானாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வந்து 2,000 டன்களுக்கு மேல் தூய்மை, மருத்துவ தர ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்றி நாட்டிற்கும் மாநிலத்தின் 32 மாவட்டங்களுக்கும் நன்மை வழங்கியது.

கல்வி
தாமிரா வித்தியாலயம் என்பது மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டம். கடந்த மூன்று ஆண்டுகளில் தாமிரா வித்தியாலயம் திட்டத்தின் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இத்திட்டத்தில் 3,735 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஐந்தரை கோடி மதிப்பிலான இத்திட்டத்தில், இதுவரை 2 கோடியே 21 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

தாமிர சுரபி
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் தாமிர சுரபி திட்டத்தின் மூலம் முதலில் 20 கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடைந்து வந்தனர். தற்போது இத்திட்டம் கூடுதலாக 13 கிராமங்களை சென்றடைகிறது. இதன் மூலம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். 91 லட்ச ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில் 47 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பசுமை தூத்துக்குடி
பசுமை தூத்துக்குடி திட்டத்தின் கீழ் 10 லட்சம் மரக்கன்றுகளை இலக்காக கொண்டு இதுவரை 1.15 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல்லுயிர் பூங்கா அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில் இதுவரை 48 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டு மையம்
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 400 பேருக்கு திறன் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வேதாந்தா அறக்கட்டளையுடன் இணைந்து இரண்டு திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் தையல் பயிற்சி பெற்ற 60 பெண்கள் தற்போது ஆடை தொழிற்சாலையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அய்யனடைப்பு கிராமத்தில் உள்ள 20 நபருடன் லாஜிஸ்டிக் வர்த்தகத்தை தொடங்கியுள்ளோம்.

குடும்ப நிகழ்வுகள்
ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து மகிழ்ச்சி மற்றும் துக்கம் நிகழ்வுகளில் பங்களிப்பு செய்து வருகிறது. 2021-2022 நிதியாண்டில் 355 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளது.

அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பது, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கு திறன்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 50 அங்கன்வாடிகளில் தரத்தை உயர்த்த தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

பெண்கள் மேம்பாடு
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களை இணைப்பதற்கான திட்டத்தில் 12138 பேர் இணைந்துள்ளனர். சாமி நத்தம் கிராமத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நாப்கின் உற்பத்தி அழகு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் நாப்கின் கொள்முதல் திட்டத்தில் 12 பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தினசரி குறைந்தபட்சம் 350 ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.

சமூகம் மற்றும் உள்கட்டமைப்பு
பல கிராமங்களில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் தற்போது வரை 15 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

உடல்நலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 75 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 36 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கடல்சார் படிப்பு
கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 16 மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 4 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
நேரடி வேலை வாய்ப்புகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை தூத்துக்குடி கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 115 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தூய்மை - பசுமையான தூத்துக்குடி
சாலை தூசுவால் மாசுபட்டு உள்ள தூத்துக்குடியை இந்தூரை போல தூய்மையான நகரமாக மாற்ற தூத்துக்குடி வர்த்தக சபை உடன் கைகோர்த்துள்ளோம். பசுமை தூத்துக்குடி திட்டத்தின் மூலம், மாவட்டம் முழுவதும் மரம் வளர்ப்பை ஊக்குவித்து, பசுமையான சூழலை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

தாமிர சேவா மையம்
மக்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை எளிதாக்குவதற்கும், ஒருங்கிணைப்பதற்காகவும் தாமிர சேவை மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். வரும் ஆண்டுகளில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு மருத்துவமனை மற்றும் நவீன பள்ளிகள் உட்பட தூத்துக்குடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைவேற்ற உள்ளது.

எனவே, இவ்வாறு பல்வேறு மக்கள் நலன் மற்றும் சமூக நலன் சார்ந்த பணிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொள்வதற்கும், பொதுமக்கள், பாமரமக்கள் இதனால் பயன்பெறுவதற்கும் இந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதே ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் விருப்பமாகும். எனவே அரசு உடனடியாக இதன் மீது கவனம் செலுத்தி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறந்திட அனுமதி அளிக்க வேண்டுகிறோம். என தெரிவித்தனர்.

  • Share on

கிறிஸ்துமஸ் பெருவிழாவினை முன்னிட்டு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

கிரில் தொழிலில் உள்ள குறைகளை களைய வேண்டும் - தமிழக கிரில் தயாரிப்பாளர் நலச் சங்கம் கோரிக்கை!

  • Share on