தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஆல்கன் டிரஸ்ட் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணிபாதுகாத்து மாசு இல்லாத தமிழகத்தை உருவாக்கிட வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் பல்வேறு இடங்களில் மரம் நட்டு வளர்த்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பெருவிழாவினை முன்னிட்டு மில்லர்புரம் பகுதியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மரம் நட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், அனல்மின்நிலைய கூட்டுறவு சங்க தலைவர் துரை, மகேஸ்வரசிங், ஜெயராஜ், முருகன், விக்னேஷ், ஜெயபால், மாரி, செந்தில், முத்துராஜ், இசக்கிராஜ், போல்பேட்டை பகுதி பிரபாகர், வட்டச்செயலாளர் நாராயணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.