தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு சங்க அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு சங்க அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று (20.12.2021) காலை தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் கல்யானராமன், கௌரவ செயலாளர் ஜேசுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேள அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பெனிஸ்கர், தம்பிராஜ், உலகநாதன், ஜெயலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஒன்றிய நிர்வாகிகள் கென்னடி, சுப்பையா, குமரேசன், எட்வின், ஆறுமுகம், திருமணித்தங்கம், கன்னுச்சாமி, ஆறுமுகப் பாண்டியன், நாகமணி, ஜவகர், தமிழ் ராஜ், ஓய்வுபெற்ற பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கணபதி, கெங்கராஜ், ராஜேந்திரன், ராமையா, ஹரி, கோபால், திருமணி, சகாயம், சந்தன ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 154 தொடக்க கூட்டுறவு சங்க வச பணியாளர்கள், நியாயவிலைக்கடைப் பணியாளர்கள், மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.