தூத்துக்குடியில் வருகிற 22ம் தேதி திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம் மற்றும் மாநகர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாவட்ட பொறுப்பாளர், அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம் 22.12.2021 புதன்கிழமை மாலை 5மணிக்கு கலைஞர் அரங்கத்தில் மாநகர அவைத்தலைவர் கோ.ஏசுதாஸ் தலைமையில், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர், சமூகநலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்புரை ஆற்றுகிறார். கூட்டத்தில் 18.12.2021 அன்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மாநகரத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர கழக நிர்வாகிகள், பகுதி கழகச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாநகர வார்டு செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.
மாவட்ட செயற்குழுக் கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் 22.12.2021 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது. தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர், அமைச்சர் கீதாஜீவன் சிறப்புரை ஆற்றுகிறார்.
கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றேன். என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.