• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

  • Share on

விளாத்திகுளம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை செவல் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் பெத்துராஜ் (வயது 31). இவருக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. மேலும் இவர் ரூ.3 லட்சம் கடனில் இருந்து வந்துள்ளார். இதனால் சரிவர வேலை செய்து கடனை அடைக்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டாராம். இ்ந்த நிலையில் இன்று காலையில் வீட்டில் கயிற்றால் தூக்கு மாட்டி தொங்கியுள்ளார்.

அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் அவரை மீட்டு குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினாராம். இதுகுறித்து தகவல் அறிந்த சூரங்குடி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும், இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் மனநல மருத்துவ மாநில மாநாடு!

தூத்துக்குடியில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் திருட்டு

  • Share on