தூத்துக்குடியில் மனநல மருத்துவா்களின் மாநில மாநாடு 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
டிசம்பர் 18, 19-ம் தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு மாநில மனநல மருத்துவ சங்க இரண்டு நாள் மாநில மாநாடு தூத்துக்குடி தனியார் மஹாலில் நடைபெற்றது.
இதில், திருநெல்வேலி சினேகா மனநல மருத்துவமனை மனநல மருத்துவர் டாக்டர் பன்னீர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார், மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனை மனநலத்துறை தலைவர் டாக்டர் குமணன் தலைமையுரை ஆற்றினார்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மனநலத்துறை தலைவர் மாலையப்பன், சென்னை கற்பகம் விநாயகா மருத்துவக்கல்லூரி மனநலத்துறை டாக்டர் சிவ இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நேரு தலைமை விருந்தினராகவும், தூத்துக்குடி அரசு மருத்துவமனை மனநலத்துறை தலைவர் டாக்டர் அப்துல் ரகுமான் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி ரெங்கசாமி மருத்துவமனை மனநல மருத்துவர் டாக்டர் சிவசைலம் நன்றியுரை ஆற்றினார்.
இந்தியாவில் தற்போது 25 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். இளம்சிறார்கள் அதிகமாக மது போதைக்கு அடிமையாகின்றனர். 13 வயது சிறுவர்கள் கூட போதைக்கு அடிமையாகின்றனர். இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு 'போதை ஒழிப்பு மனநல மருத்துவம்' என்ற கருத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், தமிழகத்தில் மாவட்டந்தோறும் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.