• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கல்!

  • Share on

தூத்துக்குடியில் சாலையோரங்களில் வீதிகளில் குளிரில் உறங்கும் மக்களுக்கு ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் போர்வை வழங்கப்பட்டது. 

தூத்துக்குடியில் வேம்படி இசக்கியம்மன் கோவில் அருகிலிருந்து தொடங்கி அண்ணாநகர் வழியாக சென்று புதிய பேருந்து நிலையம், இரண்டாம் கேட், சிவன் கோவில் ரத வீதிகள், வஉசி சாலை, கீழூர் ரயில் நிலையம், பீச் ரோடு, பனிமய மாதா கோவில், பழைய பேருந்து நிலையம், மாநகராட்சி, காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் வீதிகளில் குளிரில் உறங்கும் மக்களுக்கு ஆல் கேன் டிரஸ்ட் (ALL CAN TRUST) அமைப்பின் சார்பில்
மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ்சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜ் ஆகியோர் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு போர்வை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அனல்மின்நிலைய கூட்டுறவு சங்க தலைவர் துரை, பால்ராஜ், மகேஸ்வரசிங், மருதபெருமாள், ஜெயராஜ், முருகன், விக்னேஷ், ஜெயபால், மாரி, நாராயணன், செந்தில், முத்துராஜ், இசக்கிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கான நிலுவைத் தொகையை உடனே செலுத்துங்கள் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடியில் மனநல மருத்துவ மாநில மாநாடு!

  • Share on