தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 2500 ஆண்டுகள் பழமையான கீறல்கள் எனப்படும் கிராவிட்டி பானை ஓடுகள் 4 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கலியாவூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆய்வு மாணவர் ஆறுமுகமங்கலம் சுடலை இந்த ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளார்.
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழ்வாய்வு பணிகளில் இது போன்ற பானை ஓடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், கலியாவூர் பகுதியிலும் முறையாக அகழாய்வு செய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.