• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் முன்னாள் அமைச்சர் மகன் தொடர்புடைய வழக்கில் சம்மந்தப்பட்ட  மேலும் 4 பேர் உட்பட 8 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே பொட்டலுரணி விலக்கு பகுதியில் கடந்த 26.11.2021 அன்று ரூ.1கோடி மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பு ஏற்றி கொண்டு வந்த லாரி கடத்தப்பட்டது. இவ்வழக்கில் மாரிமுத்து (எ) மாணிக்கம், செந்தில்முருகன், ராஜகுமரன், விஷ்ணு பெருமாள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் வீரவாஞ்சி நகர், காளிதாஸ் மகன் கார்த்திக் (19), முத்துபாண்டி மகன் சின்னராஜ் (34), ஆகிய இருவரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

பன்னீர்குளம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சீனிவாசன் (43), என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், 16 வயது சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த வழக்கில் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மணப்பாடு சுனாமி காலனியைச் சேர்ந்த சிலுவை இருதயம் மகன் அஜித் (23) என்பவரை 14 வயது சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த வழக்கில் குலசேகரபட்டினம் போலீசார் கைது செய்தனர். 

மேற்கண்ட வழக்குகளில் கைதான விஷ்ணுபெருமாள், மாரிமுத்து, செந்தில்முருகன், ராஜகுமரன், கார்த்திக், சின்னராஜ், சீனிவாசன், அஜித் ஆகிய 8பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்கள் 8பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில், 8 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருள் வழக்குகளில் ஈடுபட்ட 22 பேர் மற்றும் போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 22 பேர் உட்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 191 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • Share on

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

  • Share on