• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அதிமுக தலைமை அறித்துள்ளது.

இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைப்பது, அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை அளிப்பது, வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட தலைநகரான தூத்துக்குடி மாநகரில் சிதம்ப நகர் பேருந்து நிறுத்தம் அருகில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ஆறுமுக நயினார், மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பட்டத்தில் திமுக அரசுக்கு எதிராகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அவைத்தலைவர் திருபாற்கடல், இணைச் செயலாளர் சந்தானம், ஜெரினா பாக்கியராஜ், மாவட்ட அணி செயலாளர்கள் சேகர், ஏசாதுரை, வீரபாகு, நடராஜன், ராஜசேகர், தனராஜ், பிரபாகர், விக்னேஷ், அருண் ஜெபக்குமார், துணைச் செயலாளர்கள் ஜோதிமணி, வலசை வெயிலுமுத்து, முனியசாமி, சரவணபெருமாள், ரமேஷ் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சி.த.சு.ஞான்ராஜ்,

ஒன்றிய செயலாளர்கள் காந்தி காமாட்சி, ஞானகுருசாமி, சண்முகவேல், லெட்சுமணன், விஜயகுமார், காசிராஜன், செங்கான், அழகேசன், ஜவஹர், லெட்சுமணன் பெருமாள், பகுதி செயலாளர்கள் சேவியர், ராமகிருஷ்ணன், முருகன், பொன்ராஜ், ஜெய்கணேஷ், விளாத்திகுளம் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் பாலசுப்பிரமணியன், அன்புலிங்கம், திருமணி, முன்னாள் கவுன்சிலர்கள் முருகேசன், லிங்கராஜ், ஈஸ்வரன், ஜெயக்குமார், சந்தனப்பட்டு, பகுதி துணைச் செயலாளர் கணேசன்,

பகுதி இளைஞரணி செயலாளர் திருசிற்றம்பலம், துணை செயலாளர் டைகர் சிவா, நிறுவாகிகள் அருண் குமார், மணிகண்டன், பெருமாள், கருப்பசாமி விஜயன், திருமணி, தமிழரசன், சங்கர், பிரபாகர், உலகநாதன், அசோகன், அசன், மேரி, சுரேஷ்பாபு, முரளி, ராஜா, வக்கீல் செங்குட்டுவன், ரவீந்திரன், கோமதி மணிகண்டன், சுகந்தன் ஆதித்தன், அருண்குமார், சுரேஷ், நயினார், அந்தோனி சேவியர், முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர்  கலந்துக்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் திடீர் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

  • Share on