• vilasalnews@gmail.com

அவசரகால கட்டுப்பாட்டு அறையில்; புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆய்வு

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புயல் பாதுகாப்பு மையங்களையும் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் சென்றனர். 

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூலமாகத்தான் அதிக அளவு மழை அளவு கிடைக்கப்பெறும். இந்த காலக்கட்டத்தில் இயற்கையாகவே கடலில் காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகி புயல் உருவாகும். அதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் இன்றைக்கு புரெவி புயல் உருவாகி உள்ளது. இந்த புயலானது இலங்கையில் உள்ள திறிகோணமலையில் இருந்து 120 கி.மி. தொலைவில் வலுப்பெற்று வருகிறது என்று நமது பேரிடர் மேலாண்மை துறை மூலமாக தகவல் வழங்கபட்டுள்ளது. புயலின் நகர்வானது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

நமது முதலமைச்சர் புயல் தொடர்பான முன்னெற்பாடு பணிகள் சிறப்பாக செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளார். மேலும் தென்மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். வெளியே வருவதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேலும் இந்த புயல் தாக்ககூடும் என்று கருதக்கூடிய தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் அனைத்துக்கும் மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு கண்காணிப்பு ஐஏஎஸ் அதிகாரி விதம் புயல் பாதிப்புக்கு ஏற்படுத்தும் மாவட்டத்திற்கும் அதிகாரிகளை நியமித்து புயல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தி யுள்ளார்.

அந்த வகையில் நமது மாவட்டத்திற்கு குமார்ஜயந்த்,  காண்காணிப்பு அதிகாரியாக வருகை தந்து செய்யப்பட்டுள்ள முன்னெற்பாடு பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி வருகிறார். நமது மாவட்ட நிர்வாகமும் சிறப்பான முன்னேற்பாடு பணிகளை செய்துள்ளது.  நமது மாவட்டத்தில் முன்பு மழை காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கில் கொண்டு பாதிப்புக்கு உள்ளாகும் 36 தாழ்வான இடங்கள் கண்டறியபட்டுள்ளன. அந்த 36 இடங்களுக்கும் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருவாய்த்துறை, காவல் துறை, கடலோர காவல் துறை, மீன்வளத்துறை, உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை போன்ற அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பேரிடர் காலத்தில் மக்களை பாதுகாக்கும் வண்ணம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


பேரிடர் காலங்களில் நமது மக்களை பாதுகாக்க தூத்துக்குடி மாவட்டத்தில் 93 பேரிடர் கால பாதுகாப்பு முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. அதில் 20 முகாம்கள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலேயே உள்ளது. மக்கள் பாதுகாப்பாக வந்து தங்குவதற்கு, தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன்; இந்த முகாம்கள் அமைக்கபட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் முகாம்களில் பொது மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தபட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவறை ஊரக வளர்ச்சி துறை மற்றும் பொதுப்பணித்துறை கண்மாய்கள் என மொத்தம் 637 கண்மாய்கள் உள்ளன. 

கண்மாய்களின் கரைகள் உடைப்பு ஏதும் ஏற்படாதவாறு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த பருவ மழை காலத்தில் இயல்பை விட அதிக மழை பெற்றுள்ளதால் அனைத்து கண்மாயும் நிறையும் நிலை உள்ளது. எனவே கறைகள் உடைப்பு ஏதும் ஏற்பட்டால் அவற்றை சரி செய்வதற்கு 35000க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் (ளயனெடியஉமள) தயார் நிலையில் உள்ளன. நமது மாவட்டத்தில் உள்ள 10 தாலுக்காவிலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கபட்டு ஒவ்வொரு தாலுக்காவும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக 15 ஜென்செட்டுகள் தயார் நிலையில் உள்ளன, புயலினால் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்க150 பவர்சாக்கள் தயார் நிலையில் உள்ளன, மேலும் 144 ஜேசிபிக்கள் தயார் நிலையில் உள்ளன, 26 பொக்குலைன் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன, சூப்பர்சர்க்கர்ஸ் தயார் நிலையில் உள்ளன, மேலும் அதிகபடியான நீரை வெளியேற்ற 69 ஜெட்பம்ப்ஸ் தயார் நிலையில் உள்ளன, மேலும் 200 கூடுதல் திறன் கொண்ட பம்ப்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன, நீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை மீட்க 55 படகுகள் தயார் நிலையில் உள்ளன. 486 நீச்சல் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் தயார் நிலையில் உள்ளன.

மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை முலமாக 41 பேர் கொண்ட 2 குழுக்கள் நமது மாவட்டத்த்தில் தயார் நிலையில் உள்ளன. எஸ்டிஆர்எப் என்று நமது காவல் துறையின் மூலமாக 5 குழுவினர் 150 நபர்கள் தயார் நிலையில் உள்ளன. இவர்கள் பேரிடர்களை எதிர்கொள்வதில் தயார் நிலையில் உள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் நிலை பொறுப்பாளர்கள் (கசைளவ சநளிழனெநசள) 1080 பேர் கண்டறியப்பட்டு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். புயல் காரணமாக மின்சார பழுது ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கு மின்சாரத்துறை முலமாக ஏறத்தாழ 1000 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 50 டிரான்ஸ்பார்மர்களும் தயார் நிலையில் உள்ளன. பழுது ஏற்பட்டால் சரி செய்ய மின் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் இந்த புயலை எதிர்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த அறையில் அனைத்து துறையும் ஒருங்ணைத்து செயல்படும் வண்ணம் அமைக்கபட்டுள்ளது. இந்த புரெவி புயலானது 120 கி.மி தூரம் மையம் கொண்டு இருந்தாலும். அது பாம்பன் பாலம் வழியாக கரையை கடக்கும் என எதிர்பாக்கப்பட்டுள்ளது. அதை எதிர்கொள்வதற்கு செய்யபட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும் பேரிடர் மேலாண்மை துறை / வருவாய் துறை அமைச்சர் அவர்களும் நாளை நமது மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். புயல் தொடர்பான தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

படகுகளை பொறுத்தவறை தூத்துக்குடி மாவட்டத்தில் 306  மெக்கரனசைடு போட்டுகளும், 227 கிள்னெட் போட்டுகளும் என 500க்கும் மேற்பட்ட இயந்திர போட்டுகளும் உள்ளன. சுமார் 3500 நாட்டு படகுகள் உள்ளன. இவற்றில் 72 கிள்னெட் போட்டுகள் இன்று லட்சத்தீவுக்கு அப்பால் மீன் பிடித்துகொண்டதை கண்டறியப்பட்டு அவைகளை புரட்சித்தலைவி அம்மா அரசு வழங்கிய சாட்டிலைன் போன் மூலம் தொடர்பு கொண்டு கண்டறியப்பட்டு அனைவரும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் கரை திரும்ப அறிவுறுத்தபட்டு இன்று அனைவரும் கறை திரும்பிவிட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 100 சதவித மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பிவிட்டன. அனைத்தும் பத்ரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புரெவி புயல் பாதுகாப்பு சிறப்பு முகாமில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் வந்து ஆய்வு செய்து உணவு தயாரிக்கபட்டுவதை பார்வையிட்டு முகாமில் தங்க வைக்கபட்டுள்ள பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின்செல்லத்துரை, மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.அருண்குமார், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தூத்துக்குடியில் 2500 ஆண்டு பழமையான கிராவிட்டி பானை ஓடுகள் கண்டுபிடிப்பு..!

  • Share on