மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்கியதற்காக முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் கீதாஜீவன் விருது வாங்கியதற்கு மதிமுக நிர்வாகி சரவணப்பெருமாள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
டெல்லியில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற 2020ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சமூக நலம் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்துகொண்டார். இவ்விழாவில் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு விருதினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிட அமைச்சர் தமிழ்நாடு சமூக நலம் - மகளிர் உரிமைத் துறை கீதாஜீவன் பெற்றுக்கொண்டார்.
இவ்விருதினை வாங்கி தமிழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அமைச்சர் கீதாஜீவனை இன்று அவரது அலுவலகத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக மாணவரணி துணை அமைப்பாளர் சரவணப்பெருமாள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, திமுக தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.