பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மகளிர் அணி சார்பில் நன்றி பேரணி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, திருச்செந்தூர் ஒன்றியம் வள்ளிவிளையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பேரணி நடத்தப்பட்டது.
பேரணிக்கு முன்பாக பிரச்சார வண்டியில் பேரணி குறித்தும் பிரதமர் மோடி பெண்களின் முன்னேற்றத்திற்காக வகுத்த திட்டம் குறித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் மாவட்ட மகளிர் அணி தலைவர் தேன்மொழி, மாவட்ட மகளிர் அணி பொது செயலாளர் சரஸ்வதி, மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் மகாலட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் லதா, மாவட்ட மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் புஷ்பா, திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் தங்கரதி, ஆழ்வை கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, தூத்துக்குடி கிழக்கு மண்டல தலைவர் தனலெட்சுமி, தூத்துக்குடி வடக்கு மண்டல தலைவர் லீலாவதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பர்வதவர்த்தினி, அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் விண்மதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுசெயலாளர் சிவமுருக ஆதித்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.