• vilasalnews@gmail.com

35 ஆண்டுகால வீட்டுமனை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை

  • Share on

35 ஆண்டுகால வீட்டுமனை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கிராஜா, பொருளாளர் செந்தில்முருகன் இணைச்செயலாளர் சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அம்மனுவில் கூறியுறுப்பதாவது;

இந்தியாவில் தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டுமேன தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தமிழகத்தில் ஊடகத்துறையில் பணியாற்றும் பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும் என்று பல்வேறு அறிவிப்புகள் சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் போது அமைச்சர்கள் வெளியிட்டனர். 

பல அறிவிப்புகள் அரசாணையும் வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்ததை 1986ல் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் நெல்லையிலிருந்து தனி மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கி கொடுத்தார்.

தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று கடந்த 2015ம் ஆண்டு முதல் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் தூத்துக்குடி அருகே சேர்வைகாரன் மடம் ஊராட்சியில் 3ஏக்கர் 97சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் அதன் முன் பகுதியில் உள்ள நுழைவு வாயில் தனியாருக்கு சொந்தமான பட்டா இடமாக இருந்தது இதை மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி அந்த இடத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். அதை சீர்செய்து தருகிறோம் என்று உறுதியளித்தனர்.

அதன் பின் தனியாருக்கு சொந்தமான இடத்தின் உரிமையாளரிடம் பேசி அதற்கான தொகையை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பணம் கொடுக்கப்பட்டு புதுக்கோட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் ஆளுநர் பெயருக்கு பதிவு செய்யப்பட்டு அதன் ஒரிஜினல் ஆவணங்களை கடந்த 2020 பிப்ரவரி மாதம் அப்போது கலெக்டராக இருந்த சந்திப் நந்தூரியிடம் வழங்கப்பட்டது.

நெல்லை, மதுரை என பல மாவட்டங்களில் இரண்டு மற்றும் 3ம் கட்டமாக இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடியில் பணியாற்றும் ஊடகத்துறையினருக்கு ஒரு முறைக்கூட வழங்கப்படவில்லை. 

மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொண்ட படி பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி  திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எல்லா துறையிலும் தமிழகம் முன் மாதிரியாக செயல்பட வேண்டும் என்று பணியாற்றும் அவருக்கு செய்தித்துறை தான் வெளி உலகத்திற்கு ஆட்சியின் செயல்பாடுகளையும், கட்சியின் செயல்பாடுகளையும் கொண்டு வரும் துறையாகும். அந்த துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 35 ஆண்டுகாலம் நிறைவேறாத திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி தரவேண்டும் என்று அம்ணுவில் கூறியிருந்தது.


தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கிராஜா, பொருளாளர் செந்தில்முருகன் இணைச்செயலாளர் சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலாளர் இறையன்பு, மாநில இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

  • Share on

முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் பிரதமர் : பாஜக மகளிர் அணி நன்றி பேரணி!

  • Share on