• vilasalnews@gmail.com

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் மரியாதை!

  • Share on

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று (15.12.2021) தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தை பார்வையிட்டார். பின்னர், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை மற்றும் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று (15.12.2021) தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்திற்குச் சென்று அங்குள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை மற்றும் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தனது இறுதி மூச்சு வரை போராடி, நமது தாய் மண்ணைக் காக்க, சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். இளம் தலைமுறையினரிடையே சுதந்திர இந்தியாவின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், மண்ணின் மகத்தான மகனின் உன்னத தியாகம் தொடரும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். அவருடன் அவர் மனைவி லட்சுமி ரவியும் அஞ்சலி செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து  வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டத்தில் உள்ள புகைப்படத் தொகுப்பை நேரில் பார்வையிட்டதுடன், நினைவிடத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்துப் போட்டார்.

அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

  • Share on

கற்குவேல் அய்யனார் திருக்கோவில் "கள்ளர்வெட்டு திருவிழா” : இரு நாட்களுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை!

மாணவ, மாணவியருக்கான தேசிய வாக்காளர் தின போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் அழைப்பு

  • Share on