• vilasalnews@gmail.com

கற்குவேல் அய்யனார் திருக்கோவில் "கள்ளர்வெட்டு திருவிழா” : இரு நாட்களுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குதிரைமொழி கிராமம், தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் "கள்ளர்வெட்டு திருவிழா” முக்கிய நாட்களான 16.12.2021 மற்றும் 17.12.2021 ஆகிய இரு நாட்களுக்கு பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வருவதற்கு அனுமதியில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குதிரைமொழி கிராமம், தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘கள்ளர்வெட்டு திருவிழா” கடந்த 17.11.2021 அன்று தொடங்கி வருகிற 16.12.2021 அன்று கள்ளர்வெட்டு நிகழ்ச்சியுடன் 17.12.2021 அன்றுடன் நிறைவடைகிறது.

தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டும், பரவி வரும் உருமாறிய கொரோனா (ஒமைக்ரான்) வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதியும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31.12.2021 அன்று வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆகவே மேற்படி திருவிழாவின் முக்கிய நாட்களான 16.12.2021 (வியாழக்கிழமை) மற்றும் 17.12.2021 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் யாரும் அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலுக்கு வருவதற்கு அனுமதி இல்லை என திருக்கோவில் நிர்வாகம் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்படி திருவிழாவை காண 16.12.2021 மற்றும் 17.12.2021 ஆகிய இருதினங்கள் பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 1374 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64.69 கோடி மதிப்பில் கடன், நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் மரியாதை!

  • Share on