தூத்துக்குடி மாவட்டத்தில் 1374 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64.69 கோடி மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டர்.
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணியில் இன்று ( 14.12.2021 ) நடைபெற்ற மகளிர் உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றம் குறித்து சூய உதவிக் குழு இயக்கத்தில் இணைந்து அவர்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்தும் பொருளாதார மேம்பாடு அடைவதற்கு தேவையான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 58,463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூபாய் 2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (14.12.2021) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை கீதா ஜீவன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 1374 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 64.69 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.