தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டு பகுதியில் மழைவெள்ள நீர் மீட்பு பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி 48 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான கால்டுவெல் காலனி, சிஜிஇ காலனி, திருச்செந்தூர் சாலை, வள்ளிநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் இன்று (14.12.21) காலை மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளையும், வரும் மழைகாலங்களில் குடியிறுப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு, நீரை வெளியேற்றும் திட்டங்கள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சாரு ஶ்ரீ, மாநகராட்சி பொறியாளர் சரவணன், மாநகர செயலாளர் அண்ணன் ஆனந்த சேகரன், அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலர்கள் உடன் இருந்தனர்.