தூத்துக்குடியில் வருகிற டிசம்பர் 16ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் நேரடி கூட்டம் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2021 டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.12.2021 அன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நேரடியாக நடைபெற உள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.