• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வட மாநில தொழிலாளர்களால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுகின்றன : தமிழக வாழ்வுரிமை கட்சி!

  • Share on

தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளர்களை தனியார் மற்றும் துறைமுக நிர்வாகம் வேலைக்கு பயன்படுத்துவதால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

தூத்துக்குடி துறைமுக பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இடத்தில் உள்ள அனைத்து குடோன்களிலும் வடமாநில தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் துறைமுக நிர்வாகம் வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். இதனால் முத்தையாபுரம் உள்ளிட்ட அருகில் உள்ள கிராமங்களில் மூட்டை சுமக்கும் தொழிலாளர்களுக்கும், மூடை எடை போடும் தொழிலாளர்களுக்கும், குடோன்களில் பொருட்கள் சுத்தம் தொழிலாளர்கள் என பல தொழிலாளர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டத்தை துறைமுக நிர்வாகம் ஏற்படுதியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலியை கூட உள்ளூர் தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு தனியார் நிறுவனம் மறுத்து வருகிறது.தனியார் நிறுவனம் மறுத்து வருகிறது.

ஆகவே,  அரசு அறிவித்தபடி மண்ணின் மைந்தர்களுக்கு 100% வேலைவாய்ப்பு உள்ளூர் தொழிலாளர்களுக்கு வழங்க துறைமுக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதால்  தவறு செய்யும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், தொழிலாளர்கள், தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என  தெரிவித்து கொள்கிறோம். என மனுவில் கூறப்பட்டிருந்தது.

  • Share on

தூத்துக்குடிக்கு தமிழக ஆளுநர் வருகை: ஆட்சியர் வரவேற்பு!

தூத்துக்குடியில் 6 ஜோடி மாற்றுத்திறனாளிகளுக்கு சீா்வரிசைகளுடன் இலவச திருமணம் நடைபெற்றது.

  • Share on