தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆளுநர் ரவியை, விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வரவேற்றார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, இன்று (டிச.13) முதல் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆளுநரை வரவேற்றார். பின்னர் கார் மூலம் ஆளுநர் எட்டயபுரம் புறப்பட்டுச் சென்றார். ஆளுநா் வருகையையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.