• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் ஆலையால் எங்களுக்கு பாதிப்பு இல்லை : தூத்துக்குடி நாட்டுபடகு இறால் மீன்பிடித் தொழிலாளர் நலச்சங்கம்!

  • Share on

ஸ்டெர்லைட் ஆலையால் எங்களுக்கு பாதிப்பு இல்லை. எனவே ஆலை திறக்கக்கோரி, தூத்துக்குடி நாட்டுபடகு இறால் மீன்பிடித் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தூத்துக்குடி நாட்டுபடகு இறால் மீன்பிடி தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

நாங்கள் இரால், மீன் பிடி தொழில் செய்து வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலை குறித்து எங்களிடம் தவறான புரிதல் இருந்தது. தற்போது அந்த ஆலையால் எங்கள் தொழிலுக்கு எவ்வித பாதிப்பு இல்லை என புரிந்து கொண்டோம். சமீபத்தில் அண்ணா பல்கலைக் கழக அறிவிப்பின் படி தூத்துக்குடி மாசிற்கு இருசக்கர வாகன புகையும், சாலையில் படிந்துள்ள தூசிகளும் தான் முக்கிய காரணம். எனவே ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கினால் தூத்துக்குடி வளர்ச்சி பெறும். ஆகவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோருகிறோம். என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

  • Share on

கோவில்பட்டி அருகே சிறுமியை கடத்திய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது!

தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது!

  • Share on