• vilasalnews@gmail.com

கோவில்பட்டி அருகே சிறுமியை கடத்திய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது!

  • Share on

கோவில்பட்டி அருகே சிறுமியை கடத்திய சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன். ராஜிவ் நகரை சேர்ந்த 17 வயது சிறுமியை நேற்று முன்தினம் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள்.

துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் உத்தரவின்பேரில், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து, சிறுவனையும் சிறுமியையும் மீட்டு விசாரணை நடத்தினார். சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  சிறுவனை போலீசார் கைது செய்து,  நெல்லை சிறுவர் இல்லத்தில் அடைத்தார்கள்.

  • Share on

தூத்துக்குடியில் ஸ்ரீதங்ககட்டி பிரியாணி புதியகிளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார்.

ஸ்டெர்லைட் ஆலையால் எங்களுக்கு பாதிப்பு இல்லை : தூத்துக்குடி நாட்டுபடகு இறால் மீன்பிடித் தொழிலாளர் நலச்சங்கம்!

  • Share on