தூத்துக்குடியில் ஸ்ரீதங்ககட்டி பிரியாணி புதியகிளையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அதிமுக பிரமுகரும் ஸ்ரீதங்ககட்டி பிரியாணி பேபிலி ரெஸ்ட்ராண்ட் உரிமையாளருமான ஜெகன் புதிதாக தூத்துக்குடி அண்ணாநகர் 12வது தெரு பகுதியில் தொடங்கியுள்ள புதியகிளையை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, எஸ்.பி.சண்முகநாதன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கர், அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், அதிமுக சிறுபான்மைபிரிவு மாவட்ட செயலாளர் பிரபாகர், மாணவரணி செயலாளர் விக்னேஷ், மாநகர தலைவர் மைதீன், வட்டச்செயலாளர் மனுவேல்ராஜ், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.