• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் பலி!

  • Share on

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் விநாயக சுந்தரம் என்ற சுரேஷ் (வயது 44). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவர் நேற்று இரவு தூத்துக்குடி அண்ணா நகர் 2-வது தெருவில் வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மின் வயரில் கேபிள் பட்டதால் எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த விநாயக சுந்தரம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

தூத்துக்குடியில் கரை ஒதுங்கிய மிதவை கப்பலால் பரபரப்பு!

  • Share on