மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
தமிழின் பெருமை, தமிழர் நலன், தேசப்பற்று, பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றுக்காக ஓங்கி ஒலித்த தனித்துவம் மிகுந்த குரலுக்கு சொந்தகாரர் தான் பாரதியார். இவர் கவிஞர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளராகவும் விளங்கியவர்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இளைஞர்களுக்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியவர். தேசிய உணர்வு ததும்பும் கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த தேசிய கவிஞர் மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ( 11.12.2021 ) தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தின் கெளரவ ஆலோசகர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கி ராஜா, செயற்குழு உறுப்பினர் பார்த்திப சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பிரபாகரன், மாணிக்கம், பாலகுமார், சித்திக், கார்த்திகேயன், நீதி ராஜன், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.