• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி!

  • Share on

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களுக்கு திருச்செந்தூரில் பாஜக, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே  ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கி பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியும் வேதனையும் அளித்தது.

இந்நிலையில்  விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு, திருச்செந்தூர் நகர பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர்  வேல்குமார் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், திருச்செந்தூர் நகர அரசு தொடர்பு பிரிவு தலைவர் பிரிதிவிராஜன், நகர செயலாளர் கார்த்திகேயன், நகர அரசு தொடர்பு துணைத்தலைவர் ஆனந்தகுமார், மண்டல நகரச் செயலாளர் ஆனந்த், திருச்செந்தூர் ஒன்றிய பொதுச் செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய பொறுப்பாளர் சுந்தர்,

மாவட்ட அறிவுஜீவி பிரிவு துணைத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கியப்பன், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் சரஸ்வதி அம்மாள், உடன்குடி மக்கள் தொடர்பு பிரிவு புஷ்பா அம்மாள், திருச்செந்தூர் ஐடி பிரிவு நகர தலைவர் செந்தில்குமார், திருச்செந்தூர் மண்டல துணைத் தலைவர் ராம்குமார், வினோத், நகர தொழிற்சங்க பிரிவு தலைவர் சக்திவேல்,

மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் கிருஷ்ணகுமார், புலி பால்ராஜ், நகர செயலாளர் மகாராஜன், மகளிர் பிரிவு ஆலந்தலை சுனாமி நகர் திலகவதி அம்மாள், இந்து முன்னணி நகர பொதுச் செயலாளர் முத்துராஜ்,  இந்து முன்னணி நகர துணைத்தலைவர் மணி, திருச்செந்தூர் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களுக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் அஞ்சலி!

சக்கமாள்புரம் கிராமத்தில் முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி!

  • Share on