• vilasalnews@gmail.com

ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களுக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் அஞ்சலி!

  • Share on

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களுக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே  ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கி பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியும் வேதனையும் அளித்தது.

அதனைதொடர்ந்து விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு, தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் மன்ற அலுவலகம் முன்பு கெளரவ ஆலோசகர் அருண் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி கடைபிடித்து தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

இதில், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் செந்தில், செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் மன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், பேச்சிமுத்து, பாலகுமார், கற்பக நாதன், நீதி ராஜன், சாதிக், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் தி.மு.க. எம்.எல்.ஏ. மீதான வழக்கு ரத்து!

திருச்செந்தூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி!

  • Share on