குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு விளாத்திகுளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் ,அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ராம காளியப்பன், செந்தில், விருதுநகர் காமாட்சி, சேது ராஜ், விளாத்திகுளம் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் மேடை சேர்மன், ஞானராஜ், கெத்து மற்றும் பொதுமகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.