• vilasalnews@gmail.com

தமிழ்நாட்டுக்கான தேசிய விருதைப் பெற்ற அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத்தினர் வாழ்த்து

  • Share on

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியதில் தமிழக அமைச்சர் கீதாஜீவனுக்கு தேசிய விருது வழங்கியதையடுத்து தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத்தினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கிய மாநிலத்திற்கான தேசிய விருதை சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றார். இவ்விருத்தினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

பின்னர் தனது துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் அவரது அலுவலகத்தல் வஉசி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும், அமைச்சரை நேரில் சந்தித்து பல்வேறு அமைப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Share on

எடப்பாடி ஆட்சி அ.தி.மு.க.வினருக்கு ஊழலில் பொற்கால ஆட்சி- காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் அறிக்கை

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த வீரர்களுக்கு விளாத்திகுளத்தில் அஞ்சலி!

  • Share on