மழைநீர் தேங்காதவாறு வல்லுனர்கள் குழு அமைத்து வருங்காலங்களில் தூத்துக்குடி மாநகரை வளப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
தூத்துக்குடி காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுறுப்பதாவது; கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பெய்த கனமழையால் தமிழகத்தில் 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக நிரூபணம் ஆகி விட்டது.
குடி மராமத்து என்ற பெயரில் தமிழகத்தில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளது.
எடப்பாடி ஆட்சி அ.தி.மு.க.வினருக்கு பொற்கால ஆட்சியாக ஊழலில் திகழ்ந்தது என்றால் மிகையாகாது.
மத்திய மோடி அரசு கொண்டு வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு மேலும் வரப்பிரசாதமாக அமைந்தது ஊழல் செய்வதற்கே
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாநகரமும் சென்னையை போல் எந்த ஒரு திட்டமிடுதலும் இன்றி அண்மையில் பெய்த கனமழையால் மக்கள் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கீதாஜீவன் ஆலோசனைகளை அதிகாரிகள் கேட்காததன் விளைவே தூத்துக்குடி மாநகர் வெள்ளத்தில் மிதந்தது. இதற்கு முழு பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமே சாரும்.
தற்போது 6 மாத காலமாக தான் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் அவர்கள்பொறுப்பேற்று உள்ளார்கள். மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை முதல்வரே நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு மழை நீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி மழை நீர் முழுமையும் போர்க்கால அடிப்படையில் விரைந்து அகற்ற 300 க்கும் மேற்பட்ட மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ,அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வருங்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு வல்லுனர்கள் குழு அமைத்து அவர்களின் ஆலோசனையை பெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தூத்துக்குடி மாநகரை வளப்படுத்த வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.