• vilasalnews@gmail.com

பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

  • Share on

தூத்துக்குடி ரமேஷ் பிளவர்ஸ் தனியார் நிறுவன வளாகத்தில் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.

இந்தியாவில் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பாலியல் வன்முறை சட்டம், 2013-ஆம் ஆண்டு
நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா, மக்களவையில் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ம் தேதியும், மாநிலங்களவையில் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதியில் குடியரசுத் தலைவர் இச்சட்டத்திற்கு தனது ஒப்புதலை அளித்தார்.

இன்றைய கால சூழ்நிலையில் பெண்களும் வேலைக்கு சென்றால் தான் குடும்ப நிலையை சமாளிக்க முடியும் என்பதால் சில இடங்களில் பெண்கள் விருப்பபட்டு வேலைக்கு செல்கின்றனர். ஆனால் பெண்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் ஒரு சில ஆண்களின் உடல் மற்றும் செய்கைகள் மூலமாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு உடல் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றன.

மேலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் விதமாக பத்து பெண்களுக்கு மேல் வேலை செய்யும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் உள் புகார் கமிட்டிக்கான வரைவு இருக்கிறது.

பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு கருத்தரங்கமானது இன்று (09.12.2021) ரமேஷ் பிளவர்ஸ் நிறுவன வளாகத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, உதவி பேராசிரியர், குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகம் ஜான் மோசஸ் கிரிதரன், காவல் ஆய்வாளர் வனிதா, ரமேஷ் பிளவர் நிர்வாக இயக்குநர் சுரேஷ், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூருக்கு செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் தொடக்கம்

எடப்பாடி ஆட்சி அ.தி.மு.க.வினருக்கு ஊழலில் பொற்கால ஆட்சி- காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் அறிக்கை

  • Share on