மாப்பிள்ளையூரணியில் மழை வெள்ளம் பேரிடர் நிவாரணத்தொகை வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பாக மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி திமுக ஒன்றிய துணைச்செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான இரா.அந்தோணி தனுஷ்பாலன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கடந்த நாட்களில் பெய்த கடும் மழையால் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
முதியோர், குழந்தைகள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், நேருகாலணி, ராஜபாளையம் மேற்கு, பாண்டியாபுரம், பாலதாண்டாயுதநகர், பெரியசெல்வம்நகர், ஆனந்த்நகர், அன்னை வேளாங்கன்னிநகர், குமரன்நகர், மாதாநகர், பூபாண்டியாபுரம் ஆகிய பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மழை வெள்ள பேரிடர் நிவாரண தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.