தூத்துக்குடி மாநகராட்சியில் அலுவலகத்திற்கு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்கு திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட நகராட்சிகளில் இருந்து வந்துள்ள சுகாதார முன் களப்பணியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் இன்று (06.12.2021) நேரில் சந்தித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்கு திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட 6 நகராட்சிகளில் இருந்து 52 சுகாதார முன்களப்பணியாளர்கள் வருகை தந்துள்ளனர். பல்வேறு நகராட்சிகளில் இருந்து வரப்பெற்ற பணியாளர்கள் மாநகர் பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகர் நல அலுவலர் மரு.வித்யா ஆகியோர் உடன் இருந்தனர்.